The Direct Link

Search Any Links, Share Direct Links

General

"நீங்கள் நலமா?" புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By Mariammal, Published on 6 months ago, 52 Views
Tags : #neegal_nalama

"நீங்கள் நலமா?" புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் தானே நேரடியாக பேசும் “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை அன்று மயிலாடுதுறையில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பல புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து பேசிய அவர், “நீங்கல் நலமா?” என்ற புதிய திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைப்பதாகவும் கூறினார்.

அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என உறுதி செய்வதற்காக “நீங்கள் நலமா?” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

“மக்களை நோக்கி இனி அரசு வரும்... மக்களின் நலனை அறிய அரசு காது கொடுக்கும்...” என்ற முழக்கத்தை பிரதானமாக வைத்து இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது.


Go to Download Link → →

Report Inappropriate content / Link not working ?